லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஸ்ரீஜெய் புரொடக்ஷன் தயாரிக்கும் படம் 'ஆலகாலம்'. அறிமுக இயக்குனர் ஜெய கிருஷ்ணா இயக்கி நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடித்திருக்கிறார். இவர்களுடன் தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஈஸ்வரிராவ் இப்படத்தில் நாயகனின் அம்மாவாக நடித்துள்ளார். கா.சத்யராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஜெயகிருஷ்ணா கூறும்போது "ஓர் உண்மை கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. ஆலகாலம் என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுருத்திக் கொண்டிருக்கிறது, இதில் பெரும்பான்மையான மனிதர்கள் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் லட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கையை சூறையாடுகிறது வஞ்சகம், சூழ்ச்சி எனும் ஆலகாலம். இதில் இருந்து இவர்கள் மீண்டார்களா ? தாயின் லட்சியம், இளைஞனின் முயற்சி, காதலியின் நம்பிக்கை வெற்றி பெற்றதா என்பதே கதை. வருகிற ஏப்ரல் 5ம் தேதி வெளியாகிறது” என்றார்.