கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
சில பல தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் சூதுகவ்வும் படத்தின் மூலம் கவனிக்கப்பட்டவர் சஞ்சிதா ஷெட்டி. அதன்பிறகு பீட்சா 2, என்னோடு விளையாடு, ரம், என்கிட்ட மோதாதே உள்பட சில படங்களில் நடித்தார். கடைசியாக 3 வருடங்களுக்கு முன்பு ஜானி படத்தில் நடித்தார்.
அதன்பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் 5 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். அவற்றில் ஒன்று பல்லுபடாம பார்த்துக்கணும் என்கிற அடல்ட் காமெடி படம். இதனை யூ டியூப் புகழ் விஜய் வரதராஜ் இயக்கி உள்ளார். அட்டக்கத்தி தினேஷ் ஹீரோ. அடுத்து வெங்கட் பிரபு இயக்கி உள்ள பார்ட்டி. இந்த இரண்டு படங்களும் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதுதவிர பகீரா, தேவதாஸ் பிரதர்ஸ், அழகிய கண்ணே படங்களில் நடித்து வருகிறார்.
கைவசம் 5 படங்கள் இருந்தும் அவற்றின் வெளியீட்டுக்காகவும், வெற்றிக்காகவும் காத்திருக்கிறார் சஞ்சிதா. இந்த நிலையில் கவர்ச்சியான ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்த படங்களை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பார்வைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.