இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
என்ஜாய் எஞ்சாமி, குட்டி பட்டாசு என தமிழில் தற்போது ஆல்பம் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் கொஞ்சம் பேச என்ற ஆல்பம் உருவாகி உள்ளது. குக்கூ, ஜோக்கர், ஜிப்சி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ராஜூ முருகன் குக்கூ ரெக்கார்ட்ஸ் என்ற பெயரில் பாடல்கள் வெளியீட்டில் இறங்கியுள்ளார்.
இதில் ராஜூ முருகனின் உதவியாளர் சஞ்சய் இயக்கி, நடிக்க அவருடன் சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். கொஞ்சம் பேசு எனத் தொடங்கும் இந்த பாடலை யுகபாரதி எழுத ஏ.ஆர்.ரகுமானிடத்தில் இசை கற்ற நரேன் இசையமைத்துள்ளார். பிரதீப் குமார், நித்யஸ்ரீ பாடியுள்ளனர். சாண்டி நடனம் அமைக்க பகத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பாடல் பற்றி சஞ்சய் கூறியதாவது : ஜிப்சி படத்துக்காக நாடு முழுக்க இருக்கும் தனியிசை பாடகர்களை சந்தித்தபோது எங்களுக்கு இந்த யோசனை தோன்றியது. நரேனை பார்த்ததும் பாடலாக உருவாக்க திட்டமிட்டோம். காதலர்கள், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சிறுசிறு விரிசல்களை பெரிய பிரிவாக மாறாமல் தவிர்ப்பது எப்படி? என்பதுடன் கொரோனா தொடர்பாக ஒரு முக்கிய விழிப்புணர்வு கருத்தும் பாடலில் உள்ளது'.
இவ்வாறு அவர் கூறினார்.