குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி |
ஆர்யா, அவரது மனைவி சாயிஷா நடித்த படம் டெடி. சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி இருந்தார், இமான் இசை அமைத்திருந்தார், யுவா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.
ஒரு கரடி பொம்மைக்குள் புகுந்து கொண்ட ஒரு பெண்ணின் உயிர் தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை ஆர்யாவின் துணையோடு பழிவாங்கும் கதை. கூடவே மருத்துவ உலகில் நடக்கும் உறுப்பு திருட்டு மாபியாவையும் இப்படம் பேசியது. கடந்த மார்ச் 12ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. நேற்று (ஜுன் 13) விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இது தொடர்பாக ஆர்யா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: என்னுடைய படம் டெடி ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. குழந்தைகள் இந்த படத்தை திரும்ப, திரும்ப பார்த்து மகிழ்ந்தார்கள். இமானின் பாடல்கள்களும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்போது சின்னத்திரையில் ஒளிபரப்பானதும் சந்தோஷமாக இருக்கிறது. டெடி 2ம் பாகத்துக்கான வேலைகளில் நம்ம ஊர் கிறிஸ்டோர் நோலன் (ஹாலிவுட் இயக்குனர்) சக்தி சவுந்தர்ராஜன் இறங்கி விட்டார். கண்டிப்பாக 2ம் பாகம் பண்ணப் போகிறோம். நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என்றார்.