மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில், சிலம்பரசன், நிதி அகர்வால், பாரதிராஜா மற்றும் பலர் நடித்த ஈஸ்வரன் படம் இந்த வருடப் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளிவந்தது. ஒரு பக்கம் விஜய் நடித்த மாஸ்டர் படம் அப்போது வெளிவந்து போட்டியில் இருந்தாலும் இப்படமும் ஓரளவிற்கு சமாளித்து ஓடியது.
ஈஸ்வரன் படம் தமிழ்நாட்டில் தியேட்டர்களில் வெளியாகும் போதே வெளிநாடுகளில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், தியேட்டர் உரிமையாளர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே வெளிநாட்டில் ஓடிடியில் வெளியிடுவதை தள்ளி வைத்தார்கள்.
கடந்த வருடத்திலிருந்து ஒரு புதிய படம் வெளிவந்தால் அதிக பட்சம் 50 நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியாகி விடும். ஆனால், ஈஸ்வரன் படம் மட்டும் ஓடிடி தளத்தில் வெளியாகவேயில்லை. இப்போது 5 மாதங்கள் கழித்து படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. நாளை(ஜூன் 12) முதல் இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம்.
தனுஷ் ரசிகர்களுக்கும் சிம்பு ரசிகர்களுக்கும்தான் எப்போதும் போட்டி இருக்கும். தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் அடுத்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளது. ஒரு வாரம் முன்னதாக சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தை ஓடிடியில் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் சிறு மகிழ்ச்சியாகவாவது இருக்கும்.