ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

சினிமாவில் பிசியாக நடித்து வந்தபோதே ராஜ்கிரணை வைத்து ப.பாண்டி என்ற படத்தை இயக்கி வெற்றி பெற்றார் தனுஷ். அதையடுத்து நாகார்ஜூனாவை வைத்து இன்னொரு படத்தை இயக்கும் பணிகளில் இறங்கியவர் அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.
இந்நிலையில் தற்போது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிப்படங்களிலும் நடித்து மிகப்பெரிய நடிகராகி விட்டார். கடந்த மூன்று மாதங்களாக தி கிரேமேன் படத்திற்காக அமெரிக்காவில் முகாமிட்டு நடித்து வந்த தனுஷ், சமீபத்தில்தான் அந்த படத்தில் நடித்து முடித்தார். தான் நடித்து வெளியான கர்ணன் படத்தை கூட அவர் அமெரிக்காவில் உள்ள தியேட்டரில் தான் பார்த்தார்.
இப்படியான நிலையில் தனுஷ் மீண்டும் படம் இயக்குவது எப்போது? என்பது குறித்த ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தற்போது கார்த்திக் சுப்பராஜ், மாரி செல்வராஜ், கார்த்திக் நரேன், ராம் குமார் என பல திறமையான இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறேன். அவர்கள் சொன்ன கதைகள் எனை பெரிய அளவில் பாதித்து விட்டதால் அவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதனால் தான் மீண்டும் டைரக்சனில் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. இருப்பினும் இன்னும் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் படம் இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் தனுஷ்.




