மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கொரோனா இரண்டாவது அலை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத காரணத்தால் பல புதிய படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக இதுவரையிலும் பல செய்திகள் வெளிவந்துள்ளன.
அப்படியான பேச்சுவார்த்தைப் பட்டியலில் 300 கோடி ரூபாய் செலவில் தயாரான 'ராதே ஷ்யாம்' படம் முதல் 3 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள சிறிய படம் வரை இடம் பெற்றுள்ளன. ஆனால், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படம் இடம் பெறாதது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான கங்கனா ரணவத் நடிக்க ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படத்தை ஏப்ரல் 23ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். கொரானோ தொற்று காரணமாக படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்தனர்.
இதனிடையே, இந்தப் படம் ஓடிடியிலாவது வெளிவருமா என சிலர் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. இப்படத்தின் தமிழ் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனமும், ஹிந்தி ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் ஏற்கெனவே வாங்கிவிட்டன. தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகுதான் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டுமென ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். எனவேதான், இப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை, அதற்கு தற்போது வாய்ப்பும் இல்லை என திரையுலகில் சொல்கிறார்கள்.
மேலும், படத்தை ஒரே சமயத்தில் இந்தியா முழுவதும் தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்று 'தலைவி' கதாபாத்திரத்தில் நடித்துள்ள கங்கனா ரணவத் விரும்புகிறார். இது பற்றிய சர்ச்சை ஏப்ரல் மாதம் வெளிவந்த போது அதற்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் விளக்கமளித்துள்ளார் கங்கனா.
இதுவரையில் ஹிந்தி டிரைலருக்கு 21 மில்லியன், தமிழ் டிரைலருக்கு 14 மில்லியன், தெலுங்கு டிரைலருக்கு 5 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. இந்தப் படத்தின் டிரைலரில் ஜெயலலிதாவின் அரசியல் எதிரியான கருணாநிதி சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறவில்லை.
தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில் தமிழில் இப்படம் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் வெளியாகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.