ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். தற்போது பிரபுதேவா நடிக்கும் பகீரா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் சாக்சி அகர்வால். அவரது பாய்பிரண்ட் ஆக நடிப்பதற்கு ஒரு புதுமுகம் தேவைப்பட, அதற்காக ஆடிஷன் வைத்து தேர்வானவர் தான் கோபிநாத் ரவி. மிஸ்டர் இந்தியா பட்டம் பெற்றவரான இவரை பல மாடல் ஷோக்களில் பார்த்து, இந்தப்படத்திற்காக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்..
இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது, “இந்தப்படத்தில் சாக்சி அகர்வாலின் பாய்பிரண்ட் ஆக நடித்துள்ளேன். அவரை மற்றவர்களிடம் இருந்து பாதுகாப்பது தான் என் வேலை.. நான் நடித்த முதல் காட்சியிலேயே பிரபுதேவாவை இரும்பு கம்பியால் அடிக்க வேண்டியிருந்தது. பதட்டத்தில் நான்கைந்து டேக்குகள் எடுத்தன. அதன்பிறகு பிரபுதேவா எனது பதட்டத்தை போக்கி ரிலாக்ஸாக நடிக்க வைத்தார்” என்கிறார் கோபிநாத் ரவி. .