ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஜகமே தந்திரம், கர்ணன் படங்களை முடித்த கையோடு, கடந்த பிப்ரவரி மாதம் முதல் 'கிரே மேன்' என்கிற ஹாலிவுட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் தனுஷ்.. ஆண்டனி ரூசோ மற்றும் ஜோ ரூசோ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
இந்தப்படத்தில், ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனாஸ் டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப்படத்தின் சண்டைகாட்சிகளில் நடிப்பதற்காக சுமார் ஒரு மாத காலம் சண்டைப்பயிற்சி மட்டுமே எடுத்துக் கொண்டதாக ரசிகர்களுடனான சோஷியல் மீடியா சாட்டிங்கின்போது பகிர்ந்து கொண்டுள்ளார் தனுஷ்.