ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
தெலங்கானா மாநிலத்தில் இன்று முதல் பொது முடக்கத் தளர்வு மாற்றப்பட்டுள்ளது. தினமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில் மட்டுமே இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுகிறது. இதனால், சினிமா, டிவி தொடர் படப்பிடிப்புகளை மீண்டும் ஆரம்பிக்க தெலுங்குத் திரையுலகினர் முடிவு செய்துள்ளார்களாம். எப்படியும் இந்த வாரம் தளர்வுகள் கிடைக்கும் என நினைத்து கடந்த வாரத்திலேயே அதற்கான ஆயத்தப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
தமிழகத்தில் இன்னும் சினிமா, டிவி படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அடுத்த வாரம் முதல் அனுமதி அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருந்தாலும் பெரும்பாலான தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு இங்கு நடைபெறதுவதை விட ஐதராபாத்தில் தான் நடக்கிறது. எனவே, தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் விரைவில் ஐதராபாத்தில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காகவே முன்னேற்பாடாக பல இளம் நடிகர்கள், நடிகைகள் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு வருகிறார்களாம். படப்பிடிப்புகள் ஆரம்பமானாலும் தியேட்டர்களுக்கான அனுமதி கிடைக்க காலதாமதம் ஆகும் என்கிறார்கள்.