வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
கொரோனா தொற்று காலத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில் ஆக்சிஜன் வங்கியை தொடங்கினார். இப்போது கொரோனா பாதுகாப்பு அறக்கட்டளை ஒன்றை தொடங்கி தெலுங்கு சினிமாவில் உள்ள 24 சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கும், தெலுங்கு திரைப்பட பத்திரிகையாளர்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி உள்ளார்.
"திரைப்படத் துறையை காக்கும் அத்தனை தொழிலாளர்களும், திரைப்பட பத்திரிகையாளர்களும் தங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் வந்து கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எல்லா நாட்களும் 24 மணி நேரமும் இந்த தடுப்பூசி முகாம் இயங்கும்" என்றும் அவர் அறிவித்துள்ளார்.