ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் என குறிப்பிடத்தக்க படங்களில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி, முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர் நடிகை அஞ்சலி. கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவில் தாக்குப்பிடித்து, தற்போதும் கைவசம் சில படங்களை கைவசம் வைத்துள்ளார் அஞ்சலி. குறிப்பாக சமீபத்தில் வெளியான பவன்கல்யாண் நடித்த வக்கீல் சாப் படம், அஞ்சலி மீது மீண்டும் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறது.
இந்தநிலையில் புதிய நடிகைகளின் வரவால் தனது வாய்ப்பு குறைந்துள்ளதா என்பது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் அஞ்சலி கூறியுள்ளதாவது : “புதிய நடிகைகள், சீனியர் நடிகைகளின் வாய்ப்புகளை பறித்துக் கொள்கிறார்கள் என்று ஒருபோதும் நான் அவர்களை குற்றம் சொல்ல மாட்டேன்.. காரணம் இயக்குனர் உருவாக்கும் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு நமக்கான வாய்ப்பு இருந்தால் அந்த கதாபாத்திரம் நிச்சயம் எங்களை தேடித்தான் வரும். என்னை பொறுத்தவரை அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நியாயம் செய்யமுடியுமோ அதை மட்டும் சரியாக செய்தால் போதும்.. அதனால் வாய்ப்புகள் வரவில்லை என்பதற்காக யாரையும் குறை சொல்ல மாட்டேன்” என கூறியுள்ளார்