23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை மோகன்ராஜா, இயக்க சிரஞ்சீவி நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன. அதோடு நயன்தாரா, சத்யதேவ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் கடந்த வாரத்தில் லூசிபர் ரீமேக்கை இயக்கும் மோகன்ராஜா, தெலுங்கிற்காக செய்த சில மாற்றங்கள் சிரஞ்சீவிக்கு பிடிக்கவில்லை என்பதால் அப்படத்தையே சிரஞ்சீவி நிறுத்தி விட்டதாக செய்திகள் வெளியாகி வந்தன.
தற்போது மோகன் ராஜா தரப்பில் இருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில், லூசிபர் திரைக்கதையில் தெலுங்கு பதிப்பிற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டு, படத்திற்கான இரண்டு பாடல்களுக்கும் தமன் இசையமைத்து விட்டார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பை எப்போது தொடங்குவது என்பது முடிவு செய்யவில்லை. மேலும், என்.வி.பிரசாத் தயாரிக்கும் இந்த படத்திற்கு கிங்மேக்கர் என்று தலைப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.