மீண்டும் படப்பிடிப்பில் பவன் கல்யாண் | வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலை முறியடித்த அமரன் | விஜய் கட்சியில் இணைந்த வாழை பட நடிகர் பொன்வேல் | 12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் |
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நாளை(ஏப்., 24) முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று அனைத்து கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளன. இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் ‛இன்று நேற்று நாளை' படங்களை இயக்கி ரவிக்குமார், சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தார். இதுப்பற்றி சமூகவலைதளத்தில் அவர் கூறுகையில்,
‛‛திருப்பூரில் பெரும்பாலோனோர் துணியிலான பனியன் கிளாத் வகையை சேர்ந்த மாஸ்க்கை அணிந்துள்ளனர். துவைத்து பயன்படுத்த வசதியாக இருப்பதால் பெரும்பாலும் இதை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த ரக மாஸ்க்குகள் கொரோனாவை ஒருபோதும் தடுக்காது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அதை தாடைக்கு கீழ் அணிந்து சுற்றுகிறார்கள்.
கூட்டமில்லாத ஒரு மளிகை கடையில் வண்டியை நிறுத்தினேன். தாடைக்கு கீழ் மாஸ்க் அணிந்தபடி கடைக்காரர் இருந்தார். அவரிடம் அண்ணா மூக்குக்கு மாஸ்க் போடுங்க என்றேனன். வேண்டா வெறுப்பாக செய்தார். ஒரு அக்கா சேலையை மூக்கால் பொத்தியபடி வந்தார். வைரஸிற்கு எதிரான பாதுகாப்பான தடுப்பு நடவடிக்கை என்ன என்பது இன்னமும் மக்களுக்கு சரிவர தெரியவில்லை. மாஸ்க் பற்றிய விழிப்புணர்வு கூட இல்லாமல் உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருப்பூர் 5வது இடத்தில் உள்ளது. இன்னும் முன்னுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.