நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் சம்யுக்தா ஹெக்டே. கன்னட பிக்பாசில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். தமிழில் வாட்ச்மேன், கோமாளி, பப்பி படங்களில் நடித்தார்.
சம்யுக்தா பெங்களூருவில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்யுக்தாவின் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. "என் பெற்றோர்கள் தான் எனக்கு உலகம் அவர்களுக்காக பிரார்த்தியுங்கள்" என்று உருக்மான வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதோடு பெற்றோர்கள் முதியவர்கள் என்பதால் அவர்களை மருத்துவமனையில் சேர்க்காமல் டாக்டர்களின் ஆலோசனையின்படி வீட்டிலேயே அவர்களை தனிப்படுத்தி வைத்து கவனித்து வந்தார். பெற்றோர்கள் குணமாகி வரும் நிலையில் சம்யுக்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; உங்களின் பிரார்த்தனைகளால் எனது பெற்றோர் நலம் பெற்று வருகிறார்கள். டாக்டர்கள் ஆலோசனைப்படி எனக்கு பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. நானும் அதனை பாசிட்டிவாகவே எடுத்துக் கொண்டேன்.
என் பெற்றோர்கள் குணமடைந்ததே எனக்கு புதிய உலகத்தில் பிரவேசிப்பது போல இருந்தது. நானும் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பி வருவேன். என்று கூறியிருக்கிறார். சம்யுக்தாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி நம்பிக்கையூட்டி வருகிறார்கள்.