ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் |

கடந்த 2023ம் ஆண்டில் ஹிந்தியில் அதிரடி ஆக்சன் படமாக வெளியான படம் 'கில்'. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. ரமேஷ் வர்மா என்கிற தெலுங்கு இயக்குனர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ‛கில்' படத்தை ரீமேக் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே தமிழில் கதாநாயகனாக நடிக்க துருவ் விக்ரம் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தற்போது உறுதியாகியுள்ளது. மேலும், தமிழ் ரீமேக்கில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உறியடி விஜயகுமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள். மேலும், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




