டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, நேற்று தனது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
ஆனால், இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள போட்டோக்களில் அவருடைய கையில் போடும் தடுப்பூசி மட்டும் தெரிகிறது. நயன்தாராவுக்கு போடும் தடுப்பூசி தெரியவில்லை. வெறும் விரல்களால் ஊசி போடுவது போல 'போஸ்' கொடுத்து புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.
நயன்தாராவின் புகைப்படங்களைக் பகிர்ந்த பலரும் ஊசி எங்கே இருக்கிறது தெரியவில்லை, என்றே கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு முன்னணி நடிகையான நயன்தாரா உண்மையிலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டாரா அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டது போல் போட்டோ எடுத்துக் கொண்டாரா என பலரும் கேட்டு வருகிறார்கள்.
அதற்கு நயன்தாரா சரியான விளக்கம் கொடுப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.




