டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி ஒன்றே கொரோனாவை வெல்லும் என கூறப்படும் நிலையில், பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், அவர்கள் தங்களது தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். அவர்களது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.




