ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர், கி.ரா என்று அன்பாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நேற்று(மே 17) நள்ளிரவு, தனது 99 வயதில் காலமானார். கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடுதாசி , வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்த அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சிவகுமார் கூறியிருப்பதாவது : "நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். தற்போது 80 வயதில் எனது ஞானத்தந்தை 99 வயது வாழ்ந்த கி.ரா அவர்களை இழந்து விட்டேன். கி.ரா அவர்களும், கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய் தந்தையர். எனக்கு அவருக்கும் 35 வருடகாலமாக உறவு உண்டு. அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் புதுச்சேரி சென்று கலந்து கொண்டிருக்கிறேன். அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணைப் பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடுதாசி , வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாததற்கு மனமார வருந்துகிறேன். மீண்டும் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் இரங்கல்
பார்த்திபன் டுவிட்டரில், தீரா-அவ்வளவு எழுதியும். கீ.ரா-மனதை விட்டு மறையாது அவ்வெழுத்துகள்! நான் கொடுத்த cake-ஐ ருசித்து விட்டு” பட்ஷனம் சுவையாக இருந்தது. பெயர்தான் தெரியவில்லை” என்றார். தன் மண்ணை பற்றி காதலோடு நிறைய எழுதிய கீ.ரா மீது நான் கொண்ட மரியாதையும், அவர் என் மீது கொண்ட அன்பும் எழுதித் தீரா!'' என பதிவிட்டுள்ளார்.