ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தனது சினிமா பயணத்தில் இதுவரை பாசிட்டிவான வேடங்களாகவே நடித்து வந்துள்ள சமந்தா, முதன்முறையாக தி பேமிலிமேன்-2 வெப் தொடரில் ஒரு பயங்கரவாதி பெண்ணாக நடித்துள்ளார். அந்த வகையில் முதன்முறையாக ஒரு நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார் சமந்தா.
கடந்த ஆண்டே இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு முடிந்து வெளியாக இருந்த நேரத்தில் அரசியல் சர்ச்சையில் சிக்கியதால் அதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தி பேமிலிமேன்-2 தொடர் ஜூன் 11-ந்தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பது பற்றி சமந்தாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛இந்த ரோலில் நடித்தது ஒரு புதுமையான அனுபவத்தைக் கொடுத்துள்ளது. இந்த தொடரில் எனது நடிப்புக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தால் எதிர்காலத்திலும் இதுபோன்ற அதிரடியான நெகட்டிவ் வேடங்களில் நடிப்பேன்'' என்று தெரிவித்துள்ளார் சமந்தா.