கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
இறுதிசுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் சூரரைப்போற்று. குறைந்த கட்டணத்தில் பயணிகள் விமானத்தை இயக்கிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி இருந்தது. இந்த படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
ஓடிடியில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஓடிடி தளத்திற்கும், தயாரிப்பாளருக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது. இந்த படம் ஓடிடி ரிலீஸ் படம் என்கிற கேட்டகிரியில் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் முதல் சுற்றிலேயே ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது.
தற்போது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்ல உள்ளது. வருகிற ஜுன் 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடக்கிறது. இந்த விழாவில் சூரரைப்போற்று போட்டி பிரிவில் கலந்து கொள்கிறது.