செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
பிரேமம் மலையாள படத்தில் அறிமுகமான சாய் பல்லவி அதன்பிறகு தெலுங்கில் அறிமுகமாகி அதையடுத்துதான தமிழுக்கு வந்தார். ஆனால் தற்போது தமிழ், மலையாளத்தை விட தெலுங்கில் தான் டாப் நடிகையாக இருந்து வருகிறார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், 2005ல் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரேயா நடித்து வெளியான சத்ரபதி என்ற படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்கின்றனர். இதில் நாயகனாக தெலுங்கு நடிகர் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் நடிக்க, வி.வி.விநாயக் இயக்க உள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த படத்தில் நடிக்க சாய் பல்லவி சம்மதம் சொல்லிவிட்டால் இந்த படம் மூலம் தமிழ், மலையாளம், தெலுங்கை அடுத்து ஹிந்தி சினிமாவிலும் கால்பதித்து விடுவார்.