12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் |
கொரோனா ஊரடங்கு காரணமாக பலரது வருமானம் வெகுவாய் பாதித்துள்ளது. தினசரி சம்பளம் வாங்குபவர்கள், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமல்ல சில பல லட்சங்களில் சம்பாதிக்கும் சினிமா பிரபலங்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் அப்பாவின் நிழலில் வாழாமல் 11 வருடங்களுக்கு முன்பே மும்பை சென்று தனியாக வாழ ஆரம்பித்துவிட்டார். விஜய் சேதுபதியுடன் 'லாபம்' படத்தின் படப்பிடிப்பில் கடந்த வருடம் நடித்த போது கொரோனா தொற்று பயத்தால் படப்பிடிப்பிலிருந்து இயக்குனரிடம் கூட சொல்லாமல் வெளியேறினார்.
தற்போது கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“இந்த நெருக்கடியான நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வது கடினமான ஒன்று. படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் இல்லாமல் நடிப்பது பயமாக இருக்கிறது. நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எனக்கு நிதி நெருக்கடி இருப்பதால் மற்றவர்களைப் போலவே, மீண்டும் வேலைக்குச் செல்லவே விரும்புகிறேன்.
அவர்கள் படப்பிடிப்புக்குத் தயாராக இருந்தால் நானும் அதற்குப் போய்த்தான் ஆக வேண்டும். ஒத்துக் கொண்ட சிலவற்றை நான் முடித்துக் கொடுக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் விதவிதமாகச் சம்பாதிக்கிறோம், ஆனால் எல்லோருமே சில பில்களுக்கு பணம் கட்ட வேண்டும். அதனால் தான் நானும் வேலைக்குப் போக விரும்புகிறேன். எனக்கும் சில வரையறை உண்டு. எனது அப்பா, அம்மா உதவியில் நான் வாழ விரும்பவில்லை.
11 வருடங்களாக நானே எனது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டுள்ளேன். நல்லதோ, கெட்டதோ, எனக்காக நானே எனது முடிவுகளை செய்து கொள்வேன். ஸ்மார்ட்டான சிலர் இந்த நெருக்கடி காலத்தில் காரோ, வீடோ வாங்கவில்லை. ஆனால், இதெல்லாம் ஆரம்பமாகும் போதுதான் நான் வீடு ஒன்றை வாங்கினேன். எனக்கும் சில அடிப்படை நிதி பிரச்சினைகள் உண்டு. நானும் எனது இஎம்ஐ கட்ட முயற்சிக்கிறேன்.
சிலருக்கு உணவு, மருந்து கூட வாங்க முடியாமல் தவிப்பது எனக்குத் தெரியும். இது வேலை செய்வதற்கு உகந்த சூழ்நிலை அல்ல. இந்த வைரஸ் நமக்கு சிலவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளது. அதை 100 வருடங்களுக்கு முன்பே நாம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். தனிப்பட்ட ஒருவரின் நடத்தை ஒரு கூட்டத்திற்கே பாதிக்பை ஏற்படுத்தும்,” எனக் கூறியுள்ளார்.