நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
காமெடி நடிகர் யோகிபாபு சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தான் நடிக்கும் படங்கள், தனது புகைப்படங்களை அதில் பதிவேற்றி வருவார். அதே நேரத்தில் யோகி பாபு பெயரில் போலி கணக்குகளும் உலா வருகிறது.
யோகிபாபு பெயரில் ஏற்கனவே வலைத்தளத்தில் போலி கணக்கு தொடங்கி அரசியல் தலைவர்களை கேலி செய்வதுபோன்று பதிவுகளை வெளியிட்டனர். இதனால் அதிர்ச்சியான யோகிபாபு நான் அவ்வாறு செய்யவில்லை. எனது பெயரில் டுவிட்டரில் போலி கணக்குகள் வைத்து இதுபோன்ற தவறான தகவலை வெளியிடுகிறார்கள். என்று கூறியிருந்தார். அதன்பிறகு அந்த போலி கணக்கு நீக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் யோகிபாபு பெயரில் டுவிட்டரில் போலி கணக்கு உருவாகி உள்ளது. அதில் யோகிபாபுவின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். சர்ச்சை கருத்துக்களும் பதிவிடப்படுகின்றன. இதையடுத்து தற்போது யோகிபாபு அந்த போலி கணக்கை தனது அதிகாரபூர்வமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு "இது போலி கணக்கு. இந்த கணக்கை ரசிகர்கள் யாரும் பின் தொடர வேண்டாம்” என்று எச்சரித்துள்ளார்.