69வது படம் : வினோத்திற்கு விஜய் போட்ட உத்தரவு | அஜித், கமல் வழியைப் பின்பற்றுவார்களா ரஜினி, விஜய்? | கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன்: அஜித் உடன் இணைவது குறித்து விஷ்ணுவர்தன் தகவல் | நவ., 22ல் ரிலீஸாகும் மிருணாள் குல்கர்னியின் ‛தாய் ஆகர்' | முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நடிகை கஸ்தூரி | பாலகிருஷ்ணாவிடம் சூர்யாவை மாட்டி விட்ட கார்த்தி | குபேரா படம் பற்றி ராஷ்மிகா வெளியிட்ட அப்டேட் | 2024 - தீபாவளி படங்கள் கற்றுத் தந்த பாடம் என்ன? | 'புஷ்பா 2' பதிவுகளை புறக்கணிக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் | விடை பெற்றார் நடிகர் டெல்லி கணேஷ் ; வான் படை சார்பில் அஞ்சலி : உடல் தகனம் |
ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் நேற்று திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திரையுலகமும் ரசிகர்களும் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், அவருடன் நெருங்கி பழகியவர்களும் பணியாற்றியவர்களும் அவருடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் கே.வி.ஆனந்த்தை மலையாளத்தில் தனது 'தென்மாவின் கொம்பத்து' என்கிற படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பிரியதர்ஷன். தற்போது கே.வி.ஆனந்த் குறித்த நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரியதர்ஷன்.
“நான் இயக்கிய கோபுர வாசலிலே படத்தில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பணியாற்றியபோது அவரது சீடர்களான ஜீவா மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோர் அதில் உதவியாளர்களாக வேலை பார்த்தனர். அடுத்ததாக நான் 'தென்மாவின் கொம்பத்து' படத்தை இயக்க முடிவு செய்தபோது, பி.சி.ஸ்ரீராம் மணிரத்னம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்வதில் பிஸியாக இருந்தார். அதனால், “உங்களுக்கு இன்னொரு திறமையான ஆளை தருகிறேன்” என கூறி கே.வி.ஆனந்தை அனுப்பி வைத்தார்.
தனது முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவுக்காக தேசிய விருது வாங்கித்தந்து, அவரது குருவை மட்டுமல்ல, என்னையும் கவுரப்படுத்தி விட்டார் கே.வி.ஆனந்த். அந்த சமயத்தில் வெளியான சினிமாஸ்கோப் படங்களில் முதல் நபராக தேசிய விருது வாங்கியவர் அவர் தான். பாலுமகேந்திரா அந்தப்படத்தை பார்த்துவிட்டு, அவ்வளவு அற்புதமான ஒளிப்பதிவை அதற்கு முன் பார்த்ததில்லை என பரவசப்பட்டார்.
அதன்பின் மலையாளம், இந்தி என அவருடன் திரைப்படங்கள் மற்றும் விளம்பர படங்களிலும் பணிபுரிந்துள்ளேன். எனக்கு அவருக்கும் அருமையான பிணைப்பு இருந்தது. ஒரு சகோதரராக, வழிகாட்டியாக என்மீது அவர் மரியாதை செலுத்தி வந்தார். காப்பான் பட இசை வெளியீட்டு விழாவுக்கு அவர் அழைத்தபோது சில காரணங்களால் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனது. எப்போதும் அமைதியாகவும் புன்னகை ததும்பும் முகத்துடன் காட்சியளிக்கும் அப்படி ஒரு ஒளிப்பதிவாளரை நீங்கள் வேறெங்கும் எப்போதும் பார்க்க முடியாது” என உருக்கமாக கூறியுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்..