ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்து இந்த மாதம் 9ம் தேதி வெளியான படம் 'கர்ணன்'. விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது.
இப்படத்தை தெலுங்கு ரீமேக் உரிமையை பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் பெல்லம்கொன்டா சுரேஷ் வாங்கியுள்ளாராம். அவரது மகன் பெல்லம்கொன்டா சீனிவாஸ் கதாநாயகனாக நடிக்க இப்படத்தைத் தயாரிக்கப் போகிறார்.
படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாகவும், விரைவில் படத்தின் இயக்குனர் மற்ற கலைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளார்களாம்.
பெல்லம்கொன்டா சீனிவாஸ் இதுவரை கமர்ஷியல் படங்களில்தான் நடித்திருக்கிறார். இம்மாதிரியான வித்தியாசமான வேடங்களில் நடித்ததில்லை. இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் தனது மகன் நடித்தால் நன்றாக இருக்கும் என பெரிய விலை கொடுத்து இப்படத்தின் ரீமேக் உரிமையை சுரேஷ் வாங்கியுள்ளதாக டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
இவர் தயாரிக்கும் படங்களில் முன்னணி கதாநாயகிகளைத்தான் தன் மகனுக்கு ஜோடியாக நடிக்க வைப்பார். இப்படத்திலும் அப்படிப்பட்ட ஒருவரைத்தான் தேர்ந்தெடுப்பார் என்கிறார்கள்.




