ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
ஒரு படத்தை ஒரு முறை பார்ப்பதே அரிதாகி வரும் இந்தக் காலத்தில் ஒரு பழைய படத்தை திரும்பத் திரும்ப, அதுவும் 267 முறை பார்த்தாக ஒரு நடிகை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
'ஸ்காம் 1992' இணையத் தொடரில் நடித்துள்ள நடிகை ஸ்ரேயா தன்வன்த்ரி. தெலுங்குப் பெண்ணான இவர் தற்போது ஹிந்தித் திரையுலகில் நடித்து வருகிறார்.
ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெங்கடேஷ், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்து 1991ம் ஆண்டு வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்ற படமான 'க்ஷன க்ஷனம்' படத்தைத்தான் இவர் 267 முறை பார்த்துள்ளாராம்.
“என்னுடைய அபிமான தெலுங்குப் படத்தை 267வது முறையாக மீண்டும் பார்க்கிறேன். ராம்கோபால் வர்மா, வெங்கடேஷ், ஸ்ரீதேவி, பரேஷ் ராவல் அவர்களின் முழுமையான சிறந்த படம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
267வது முறை எனக் குறிப்பிட்டுள்ளதன் மூலம் ஒவ்வொரு முறை பார்த்ததையும் சரியாகக் கணக்கு வைத்திருப்பாரோ ?. சீக்கிரமே 300வது முறை பார்த்துவிட்டேன் என பதிவிட வாழ்த்துவோம்.