‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

குற்றம் 23-க்கு பின் இயக்குனர் அறிவழகன், நடிகர் அருண் விஜய் கூட்டணியில் மற்றுமொரு படம் உருவாகி உள்ளது. ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் நடித்துள்ளனர். பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். இப்போது படத்திற்கு ‛பார்டர்' என பெயரிட்டுள்ளனர்.
‛‛இது ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படம். இதை முழுக்க ஆக்ஷன் கலந்த த்ரில்லராக கொடுத்திருக்கிறேன். எனது முந்தைய படங்களிலிருந்து வேறுபட்டு இருக்கும். ஸ்பை த்ரில்லர் என்றால் தேசபக்தி, தீவிரவாதம் என்று எதிர்பார்ப்பார்கள். கண்டிப்பாக தேசபக்தியை வேறொரு கோணத்தில் சொல்லியிருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் மக்கள் திரையரங்கிற்கு நம்பி படம் பார்ப்பதற்கு ஏற்ற படமாக இருக்கும் என்கிறார் அறிவழகன்.




