தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித், எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் வலிமை. காலா படத்தில் நடித்த ஹூமா குரோசி இப்படத்தில் நாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அஜித்தின் 50ஆவது பிறந்த நாளான மே 1-ந்தேதி வெளியாகும் என்று அப்பட தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது வலிமை அஜித்தின் நடிப்பு குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், வலிமை படத்தில் ஒரு பிரமாண்டமான பைக் ரேஸ் சண்டை காட்சி உள்ளது. அதில், டூப் பயன்படுத்தாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் அஜீத். அந்த பைட் மிரட்டலாக படமாக்கப் பட்டுள்ளது. 50 வயதில் ஒருவர் இந்த அளவுக்கு சண்டை காட்சியில் நடிக்க முடியுமா என்பது ஆச்சர்யமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் போனிகபூர்.