மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஷால் நடித்த 'ஆக்ஷன்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்ய லட்சுமி. அடுத்து தனுஷ் ஜோடியாக 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடித்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா பிரபலங்களின் வரிசையில் இவரும் புதிதாகச் சேர்ந்துள்ளார்.
“கொரோனால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளியை பார்க்கிறீர்கள். நானும் மாஸ்க் அணிந்தேன், சானிட்டைஸ் செய்து கொண்டேன், சமூக இடைவெளி கடைபிடித்தேன். பரிந்துரைத்த எல்லாவற்றையும் செய்தேன். ஒரு கட்டத்தில் சோர்வாக இருப்பதை உணர்ந்தேன். அது எனது இயல்பு வாழ்க்கையை பாதித்தது. இருப்பினும் அதை எளிதாக எடுத்துக் கொண்டேன். நுரையீரல் வலுவடைய யோகா செய்கிறேன். மல்டிவிட்டமின்கள் எடுக்கிறேன். பால்கனியிலிருந்து என பெற்றோருடன் உரையாடுகிறேன். கடைசியாக ஒன்றை அறிந்தேன். மாஸ்க் அணியுங்கள், நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள். ஆனால் கொரோனாவை சாதாரணமாக எடுக்காதீர்கள்'' என தனது கொரோனா அனுபவத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.