ஆளே மாறிய அயோத்தி ப்ரீத்தி அஸ்ராணி | ஹீரோயின் இல்லை, அர்த்தமுள்ள கேரக்டரில் பிந்துமாதவி | சென்ட் பிசினஸில் இறங்கிய ராஷ்மிகா மந்தனா | கூலி: அமெரிக்கா டிக்கெட் முன்பதிவு ஆரம்பம் | குடும்பப் படங்களுக்கான வரவேற்பு: மீண்டும் நிரூபிக்குமா இந்த வாரப் படங்கள் | சூர்யாவுக்கு 50, தனுஷிற்கு 42 : சுடச்சுட வெளியாகும் புது அறிவிப்புகள் | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' - பின்னணி இசை தாமதம்? | மாரீசன் படத்தை பேசாத வடிவேலு, பஹத் | “ஹிந்தி திரிஷ்யம் 3 தயாரிப்பு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்தனர்” : ஜீத்து ஜோசப் | “உங்களுக்கு செம தைரியம் தான்” : மோகன்லாலுக்கு குஷ்பூ பாராட்டு |
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக-பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளரான வானதி சீன்வாசனுக்கும் கமலுக்குமிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
மேலும், வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக கெளதமி, நமீதா என பல திரையுலகினர் பிரச்சாரம் செய்து வருவதைப் போன்று கமலுக்கு ஆதரவாக அவரது அண்ணன் மகளான நடிகை சுகாசினி பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தற்போது கமலின் இளைய மகளும் நடிகையுமான அக்சராஹாசனும் களமிறங்கியிருக்கிறார்.
தேர்தல் களத்தில் கமல் மற்றும் டார்ச்லைட்டுடன் தான் நின்றும் புகைப் படங்களை இணையத்தில வெளியிட்டுள்ள அக்சராஹாசன், என் அப்பா ஒரு உண்மையான போராளி. தான் விரும்பி யதை செய்வதற்காக எல்லா வகையான வலிகளை கடந்து போராடுகிறார் என்று பதிவிட்டுள்ளார்.