'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி இயக்கியுள்ள படம் இது என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் கண்டா வரசொல்லுங்க பாடல் சூப்பர் ஹிட்டானதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கர்ணன் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில் தனுஷ் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தனது பேச்சை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், "உங்களோடு இப்போது இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருப்பேன். சீக்கிரம் வருவேன். கர்ணன் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நான் ஸ்பெஷலா நினைக்கும், கொண்டாடும் நிறைய பேர் இந்த படத்தில் இருக்கிறார்கள்.
இந்த படம் எனக்கு ஒரு நடிகனாக, மனிதனாக நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது. மாரி செல்வராஜின் உறுதியும், அவரோட மனிதாபிமானமும் தினம் தினம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு மனிதன் மாரி செல்வராஜ் மாதிரி நல்ல மனிதாபிமானம் உள்ளவராக இருக்க முடியமா என்று நான் அவ்வப்போது யோசிப்பேன். என்னைய உங்க கர்ணனாக மாற்றியதற்கும், என் வாழ்க்கையில் வந்ததற்கும் நன்றி மாரி. எப்பவும் இப்படியே இருங்க. உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான இடம் காத்திருக்கிறது.
கர்ணன் உங்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும் என நம்புகிறேன். கர்ணன் வருவான். சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்", என தனுஷ் கூறியுள்ளார்.