நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா | மோகன்லாலுக்கு அக்., 4ல் விழா எடுத்து கவுரவிக்கும் கேரள அரசு | பிளாஷ்பேக்: சட்டசபையில் சர்ச்சையான 'தர்மபத்தினி' | மோகன்லாலின் ஜிம் பார்ட்னராக மாறிய திரிஷ்யம் பொண்ணு | பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி | டிக்கெட் கட்டண உயர்வை ரத்து செய்தது தெலுங்கானா அரசு | துவங்கியது கன்னட பிக்பாஸ் சீசன் 12 : பிடிவாதம் தளர்த்தி மீண்டும் இணைந்த கிச்சா சுதீப் |
கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் படம் 'இந்தியன் 2'.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரானோ பாதிப்பும் வந்ததால் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
இந்நிலையில் தங்களது 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் வேறு எந்த ஒரு படத்தையும் ஷங்கர் இயக்கக் கூடாது என நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்க உள்ளார். அடுத்து ஹிந்தியிலும் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
லைக்கா நிறுவனம் அளித்துள்ள புகாரில், “இந்தியன் படத்திற்காக போடப்பட்டட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டது. ஷங்கருக்கு பேசப்பட்ட சம்பளமான 40 கோடி ரூபாயில் 14 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டது. மேலும் பாக்கியாக உள்ள 26 கோடி ரூபாயையும் நீதிமன்றத்தில் கட்டிவிடுகிறோம். மற்ற படங்களை அவர் இயக்கத் தடை விதிக்க வேண்டும்,” என்றும் கேட்கப்பட்டதாம்.
ஆனால், ஷங்கர் தரப்பு நியாயத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் அளிக்க முடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.