ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
இந்தியத் திரையுலகம் என்பது மொழிவாரியாகவே இன்னும் பிரிந்து கிடக்கிறது. தமிழ் இயக்குனர்கள் தமிழைத் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சென்று படங்களை இயக்கினால் அவர்கள் திரையுலக அரசியல், ரசிகர்களின் அரசியல், ஊடக அரசியல் ஆகியவற்றை சமாளிக்க வேண்டி இருக்கிறது.
தமிழ்த் திரையுலகம்தான் மற்ற மொழிகளிலிருந்து வரும் இயக்குனர்களையும், கலைஞர்களையும் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறது. இதற்கு முன்பு அப்படி பலர் வந்து இங்கு குறிப்பிடும்படியான படங்களையும், வெற்றிகளையும் தந்துள்ளார்கள். அவர்களது படங்கள் தோல்வியடைந்தால் கூட இங்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்ததில்லை.
ஆனால், தமிழ் இயக்குனர்கள் மற்ற மொழிகளுக்குச் சென்று வெற்றி பெற்றால் கூட அந்த வெற்றி அந்தப் படத்தில் நடித்த அந்தந்த மொழி நடிகர்கள்தான் காரணம் என பேசுகிறார்கள். அதேசமயம் அந்தப் படங்கள் தோல்வியடைந்தால் அதற்கான காரணத்தை இயக்குனர்கள் மீது போட்டுவிடுகிறார்கள்.
தெலுங்கிற்குச் சென்று 'கேம் சேஞ்ஜர்' படத்தை இயக்கிய ஷங்கர் அந்தப் படத்தின் தோல்விக்குப் பிறகு தெலுங்கு ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். படம் வெளியாகி இத்தனை மாதங்களாகியும் அவர் மீதான விமர்சனம் நிற்கவில்லை. இதற்கு முன் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஷங்கர் கடைசியாக தமிழில் இயக்கிய 'இந்தியன் 2', தெலுங்கில் இயக்கிய 'கேம் சேஞ்ஜர்' என இரண்டு தோல்விப் படங்களைக் கொடுத்த காரணத்தால் இவ்வளவு விமர்சனத்துக்கு ஆளாகிறார்.
எந்த மொழியாக இருந்தாலும் சரி, சினிமாவில் வெற்றி பெற்றால் மட்டுமே புகழ்வார்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.