அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்குனர் விஜய் இயக்கத்தில் தலைவி என்கிற படம் தயாராகியுள்ளது. இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். கங்கனாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கங்கனா பற்றி பேசிய பாகுபலி படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், “இந்தப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனாவை அழைத்தபோது, ஜெயலலிதா மாதிரி நடிக்க நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டார்.. நீங்கள் நீங்களாக இருங்கள் போதும் என்று சொன்னேன். யாருக்கும் தலைவணங்காத, சுயமதிப்பு கொண்ட, இரும்பு பெண்மணி ஜெயலலிதா.. கங்கனாவும் அதே போன்றவர் தான். தற்போது தேசிய விருதை வென்றுள்ளார். தலைவி படத்தலைப்பு போல் ஒரு நாள் அவரும் தலைவியாக வாழ்த்துக்கள்.” என கூறினார்
இந்தபடத்திற்கும் விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுதியுள்ளார். ஏற்கனவே கங்கனா இந்தியில் நடித்து இயக்கிய மணிகர்ணிகா படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியும் உள்ளார். அந்த நட்பின் அடிப்படையில், விஜயேந்திர பிரசாத் தான் இந்தப் படத்திற்குள் கங்கனாவை அழைத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..