தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? |
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன், லால், யோகிபாபு, நட்டி மற்றும் பலர் நடிக்கும் கர்ணன் படத்தின் டீசர் நேற்று யு டியூபில் வெளியிடப்பட்டது.
2 நிமிடம் ஓடும் டீசரில் தனுஷ் மொத்தமாகவே 5 வினாடிகள் தான் காட்டப்படுகிறார். கையில் நீண்ட வாளுடன், ஒரு குதிரை மீது அமர்ந்து அவர் வரும் காட்சி ஐந்தே ஐந்து வினாடிகள் தான் இடம் பெற்றுள்ளது. அதற்கே தனுஷ் ரசிகர்கள் மீண்டும் ஒரு தேசிய விருது பார்சல் என கமெண்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
“அடுத்த தேசிய விருதும் இந்தப் படத்திற்கு உண்டு என ஒருவர் போட்ட கமெண்ட்டை மட்டும் 13 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். தனுஷுக்கு அடுத்த தேசிய விருது, அசுரன் போல கர்ணனும் தேசிய விருது பெறும், எப்பே, கர்ணா ஒரு விருதையும் விடாதப்பா, அடிச்சி நொறுக்குப்பா, அடுத்த தேசிய விருது ஒண்ணு பார்சல், என ரசிகர்கள் பலரின் கமெண்ட்டுகளிலும் தேசிய விருதுதான் அதிகம் இடம் பிடித்துள்ளது.
38 லட்சம் பார்வைகளுடன் யு டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது கர்ணன் டீசர்.