ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை |

தேசிய விருது பெற வேண்டும் என்பது இந்தியத் திரையுலகில் இருக்கும் பலருக்கும் ஒரு கனவாக இருக்கும். ஆனால், அந்த விருதும் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடாது. ஒரு சிலருக்கு மட்டுமே விருதுகள் இரண்டு முறைக்கு மேல் கிடைத்திருக்கின்றன. ஆனால், 20 வருட இடைவெளியில் மீண்டும் கிடைத்திருக்கிறது என்பது ஒரு ஆச்சரிய நிகழ்வு தான். அந்த ஆச்சரியத்திற்கச் சொந்தக்காரர் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன்.
அவர் முதன் முதலாக இயக்கி நடித்து 1989ம் ஆண்டு வெளிவந்த 'புதிய பாதை' படம் அந்த ஆண்டிற்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அதற்குப்பிறகு பத்து ஆண்டுகள் கழித்து பார்த்திபன் இயக்கி நடித்து 1999ம் ஆண்டு வெளிவந்த 'ஹவுஸ்புல்' படம் அந்த ஆண்டிற்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.
அடுத்து இருபது வருட இடைவெளிக்குப் பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு தேசிய விருதைப் பெற்றுள்ளார் பார்த்திபன். 2019ம் ஆண்டு அவரது இயக்கம், நடிப்பில் வெளிவந்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்திற்கு சிறப்பு மென்ஷன் விருதைப் பெற்றுள்ளார்.
இவ்வளவு வருட இடைவெளியில் இந்தியத் திரையுலகில் வேறு யாராவது தேசிய விருதை வென்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.