பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
2005ல் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார். இந்நிலையில், மீண்டும் பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்தில் ரஜினி நடித்த வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கயிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதையடுத்து, சந்திரமுகி 2வில் சிம்ரன், ஜோதிகா, கியாரா அத்வானி போன்ற நடிகைகள் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியானபோது அதற்கு மறுப்பு தெரிவித்தார் லாரன்ஸ். இந்நிலையில் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வரும் அவர், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மே மாதம் முதல் சந்திரமுகி-2 படத்தில் நடிக்க தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், சந்திரமுகி படத்தில் மனோதத்துவ டாக்டர் வேடத்தில் வேட்டையன் பங்களாவிற்குள் செல்வார் ரஜினி. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் அதே பங்களாவிற்குள் ஒரு புதிய குடும்பம் செல்வதும் அதன்பிறகு வேட்டையன் என்ட்ரி கொடுப்பது போன்றும் கதை பண்ணப்பட்டுள்ளதாம். அந்த வகையில் சந்திரமுகி-2 படம் முழுக்க வேட்டையனாகவே நடிக்கிறாராம் லாரன்ஸ்.