ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த 'மாஸ்டர்' படத்தில் இடம் பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடலை சூப்பர் ஹிட்டான ஒரு பாடல். அப்பாடலில் இடம் பெற்ற நடனத்தை கிரிக்கெட் வீரர் அஷ்வின் மற்றும் பல பிரபலங்கள் ஆடி இன்னும் அதிகமாகப் பிரபலப்படுத்தினர்.
ஹிந்தியிலும் வெளியான 'மாஸ்டர்' படம் அங்கு தோல்வியடைந்தாலும் 'வாத்தி கம்மிங்' பாடல் வட இந்தியாவிலும் பிரபலமாகிவிட்டது. சோனி டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சூப்பர் டான்சர் சாப்டர் 4' நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் இப்பாடலுக்காக நடனமாடிய புரோமோ ஒன்றை அந்த டிவி நிறுவனம் இரு தினங்களக்கு முன்பு வெளியிட்டது.
அதை தற்போது விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து இன்று 'வாத்தி கம்மிங்' ஐ டுவிட்டர் டிரென்டிங்கில் மீண்டும் வரவழைத்துவிட்டனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி ஏற்கெனவே இப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றும் யு டியுபில் பிரபலம்தான்.
இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் மார்ச் 27ம் தேதி தான் ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சியின் வீடியோ வெளிவந்தால் அதுவும் நிச்சயம் வைரலாகிவிடும் என்பதை இப்போதே சொல்லலாம்.