ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஜவுளிக்கடை அதிபர் சரவணன் சினிமாவில் ஹீரோவாக நடிக்கிறார். அவரே தயாரிக்கும் இப்படத்தை இரட்டை இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்குகிறார்கள். ஹிந்தி நடிகை ஊர்வசி ரவுட்லா நாயகியாக நடிக்க, பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தொடர்பான போட்டோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அவரின் சண்டைக்காட்சி போட்டோக்கள் வெளியான நிலையில் இப்போது குலுமணாலியில் எடுக்கப்பட்டு வரும் படப்பிடிப்பு ஸ்டில்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது.
படத்தில் சரவணன் உடன் நடித்து வரும் விவேக் கூறுகையில், ''சரவணனின் நடிப்பை பார்க்கவே நிச்சயம் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என நம்புகிறேன். அருமையான கதையை எடுத்து வருகின்றனர் இயக்குனர்கள் ஜேடி அண்ட் ஜெர்ரி. படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்குகிறார்கள். மக்கள் ரசிக்கும்படியான படமாக இருக்கும். அவருடன் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது என்கிறார்.




