ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். ரஜிஷா, லட்சுமி பிரியா, யோகிபாபு, லால் என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். ஏப்., 9ல் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடலை ஒரு நாட்டுப்புறப்பாடலை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. அதையடுத்து தற்போது பண்டாரத்தி புராணம் என்ற பாடலில் தமிழகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைகள் இடம் பெற்றிருப்பதாகவும், அதை நீக்கும் வரை கர்ணன் படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று கோரியும், மதுரை சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த புல்லட் ரவி என்பவர், மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தயாரிப்பாளர் எஸ்.தாணு, டைரக்டர் மாரிசெல்வராஜ், திங்க் மியூசிக் இந்தியா, யூடியூப் சேனல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.