இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தின் சில பாடல்கள் யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில் 'எப்படி இருந்த நாங்க' என்ற நகைச்சுவைப் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. விவேக் மெர்வின் இசையமைப்பில் அந்தோணி தாசன் பாடியுள்ள அந்தப் பாடலின் சிறு வீடியோவைப் பகிர்ந்து ராஷ்மிகா படம் பற்றியும் தெரிவித்துள்ளார்.
“இந்த வீடியோவையும் பாடல் வரிகளையும் கேளுங்கள்.. இதைவிட சிறப்பாக இருக்க முடியாது. இந்தக் குறிப்பிட்ட காட்சி படமாக்கப்படும் போது நானும் அதைத்தான் நினைத்தேன். இந்தக் கதாபாத்திரத்தை நான் எவ்வளவு ரசித்து நடித்தேன் என்பதை நீங்கள் விரைவில் பார்க்கப் போகிறீர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாடலில் ஒரு நிலத்தில் குட்டி டிராக்டரை வைத்து அவர் உழும் காட்சி இடம் பெற்றுள்ளது. சேற்றில் குட்டி டிராக்டரை ஓட்டுவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அதிலும் ஒரு பெண் ஓட்டுவதற்கு சிரமமாக இருக்கும். அக்காட்சியில் ராஷ்மிகா அதை நன்றாகவே செய்திருக்கிறார். தான் அந்தக் காட்சியில் நடிக்க சிரமப்பட்டதும் அதற்கேற்றாற் போல பாடல் வரி 'எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம், வான்ட்டடா வந்து மாட்டிக்கிட்டோம்” என பொருத்தமாக இருப்பதைத்தான் ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.