விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
தமிழ் நாட்டை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி சவுந்தர்ராஜன். 2006ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம் புகழ் அடைந்தார். சர்வதேச போட்டியில் 12 பதக்கங்களும், தேசிய போட்டிகளில் 50 பதக்கமும் பெற்றுள்ளார்.
ஆனால் இவர் மீது எழுந்த பாலின தொடர்பான சர்ச்சையால் அவரின் பதக்கங்கள் பறிக்கப்பட்டது. அதன் பின் அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம். தற்போது பயிற்சியாளராக இருக்கிறார். இவரது வாழ்க்கை கதை தற்போது சாந்தி சவுந்தர்ராஜன் என்ற பெயரில் சினிமாவாகிறது. 888 புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயசீலன் தவப்புதல்வி என்பவர் இயக்குகிறார். கோபிநாத் டி.தேவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: சாந்தியின் வாழ்க்கையில் நடந்த, இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் திருப்பங்களுடன் கதை வடிவமைக்கப்பட்டு, முழுக் கதையினையும் சாந்தி செளந்தரராஜனிடம் ஒப்புதல் பெற்று படமாக்கப்பட உள்ளது. இவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டு நாளன்று படத்தின் கதாநாயகியின் அறிவிப்பு வெளியிடப்படும். முதற்கட்ட படப்பிடிப்பு, புதுக்கோட்டை அருகே உள்ள சாந்தி செளந்தரராஜனின் கிராமத்தில் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து பஞ்சாப், கத்தார், ஓமன் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.
பெண்களின் திறமை மற்றும் வலிமையையும், பெண்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் படத்தின் பல காட்சிகள் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகிறது. என்றார்.