தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் டாப்ஸி. தற்போது தமிழில் இரண்டு படங்கள், ஹிந்தியில் நான்கு படங்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மும்பையில் தற்போது சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி அதில் குடியேறி உள்ளார். புதிய வீட்டில் தரையில் உட்கார்ந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, “வீடு - நண்பர்களை சந்திக்கும் இடம், குடும்பம் கூடவும், அன்பை வளர்க்கும் இடம். புது வீட்டிற்குள் குடிபுகும் நிகழ்வு, மகிழ்ச்சியான வீடு, மகிழ்ச்சியான தரை,” எனக் குறிப்பிட்டுப் பகிர்ந்துள்ளார்.
டாப்ஸியின் புதிய வீட்டிற்கு அவரது சினிமா நண்பர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
மும்பையில் உள்ள ஒவ்வொரு சினிமா பிரபலத்திற்கும் சொந்தமாக வீடு வாங்குவதென்பது பெரும் கனவு. அதிலும் சில பிரபலமான பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் தனி வீடு கூட கிடைக்காது, அடுக்குமாடி குடியிருப்புகள்தான் கிடைக்கும். தென்னிந்தியாவில் உள்ள சில பிரபலங்கள் கூட தற்போது மும்பையில் வீடு வாங்கும் ஆவலில் இருக்கிறார்கள்.
சமீபத்தில் டாப்ஸி வீட்டில் வருமான வரி நடைபெற்றது குறிப்பிட வேண்டிய ஒன்று.