புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ்த் திரையுலகம் ஒரு மோசமான கால கட்டத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் இதே நாளில்தான் தியேட்டர்களை மூடினார்கள். கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவில்லை.
ஜனவரி மாதம் வெளியான 'மாஸ்டர்' படம் நன்றாகவும், பிப்ரவரி மாதத்தில் வெளியான 'களத்தில் சந்திப்போம், பாரிஸ் ஜெயராஜ்' ஆகிய படங்கள் ஓரளவிற்கும் தாக்குப் பிடித்து ஓடியிருக்கின்றன. இந்த மாதம் வெளியான 'நெஞ்சம் மறப்பதில்லை' முதல் சில நாட்கள் நன்றாக ஓடியிருக்கிறது. இவற்றைத் தவிர வேறு எந்த படங்களும் குறிப்பிடும்படி ஓடவில்லை.
இதனிடையே, மக்கள் தியேட்டர்கள் பக்கம் வராத காரணத்தால் பல தியேட்டர்களை கடந்த சில வாரங்களாக மூடி வைத்திருக்கிறார்கள். சில தியேட்டர்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காட்சிகள் மட்டுமே நடக்கின்றன. இந்நிலை இப்படியே தொடர்வதால் நாளுக்கு நாள் மூடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சொல்கிறார்கள்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை ஒழுங்காக மேற்கொள்ளவில்லை என்றால் தியேட்டர்களை மூட உத்தரவிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மக்கள் வராத காரணத்தால் அவர்களாகவே தியேட்டர்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா வேறு நாளுக்கு நாள் பரவி வருவதால் மக்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு வருவதைத் தவிர்த்து வருகிறார்கள் என்பதே உண்மை. இந்நிலை நீடித்தால் அடுத்த மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள சில பெரிய படங்களின் வெளியீட்டைக் கூட தள்ளி வைப்பார்கள் என்றும் சொல்கிறார்கள்.