பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் காடன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. கடந்த ஆண்டிலேயே வெளியாக வேண்டிய இப்படம் லாக்டவுன் காரணமாக தாமதமாகி வந்த நிலையில், மார்ச் 26-ல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஷ்ணு, இந்த படம் எனது கேரியரில் மிக முக்கியமான படம். இந்த படத்திற்காக கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறேன். அதேசமயம் முன்பு யானைகளைக் கண்டு பயந்தேன். ஆனால் யானைகள் குழந்தை மாதிரி என்பது அவற்றுடன் பழகிய பிறகு தான் தெரிந்து கொண்டேன். அந்தவகையில் எனக்கு இப்போது யானைகள் மீது பயமில்லை. மனிதர்கள் மீதுதான் பயம் என்று சொன்னார் விஷ்ணு.
இந்த நிலையில் தற்போது ஒரு யானையின் மீது தான் கூலாக ஏறி அமர்ந்து விட்டு, இறங்கும் ஒரு வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் விஷ்ணு. படப்பிடிப்பு தளத்தில் யானையுடன் பழகிய விதம் குறித்தும் அதில் பதிவிட்டுள்ளார்.