காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
'மைனா, கும்கி' படங்களின் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபட்டி, விஷ்ணு விஷால் மற்றும் பலர் நடித்து தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் உருவான படம் 'காடன்'. தமிழ், தெலுங்கில் இப்படம் இந்த வருடம் மார்ச் மாதம் வெளிவந்தது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் தோல்வியைத் தழுவியது. மார்ச் மாதத்தில் வட இந்தியாவில் கொரானோ இரண்டாவது அலை தாக்க ஆரம்பித்தால் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்தனர்.
தற்போது ஹிந்திப் பதிப்பான 'ஹாத்தி மேரி சாத்தி'யை செப்டம்பர் 18ம் தேதி ஜீ சினிமா டிவியில் நேரடியாக ரிலீஸ் செய்கிறார்கள். அன்றைய தினம் ஈராஸ் நவ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகிறது.
தமிழ், தெலுங்கில் வரவேற்பைப் பெறாத காரணத்தால் ஹிந்தியிலும் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெற வாய்ப்பில்லை. எனவே, படத்தை நேரடியாக டிவியில் வெளியிட முடிவு செய்துவிட்டார்கள் என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், தெலுங்கில் ஏற்று நடித்த கதாபாத்திரத்திலேயே ஹிந்தியிலும் ராணா டகுபட்டி நடித்துள்ளார். தமிழில் விஷ்ணு விஷால் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் புல்கிட் சாம்ராட் நடித்துள்ளார்.
படத்தில் தமிழ் முகங்களை விட ஹிந்தி முகங்கள் அதிகம் இருந்ததால்தான் படம் தமிழில் தோல்வியைத் தழுவ ஒரு காரணமாக இருந்தது.