பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

உடன் ஜோடியாக நடித்தவர்களுடன் நடிகர், நடிகையர் காதலில் விழுவது திரைத்துறையில் ஒன்றும் புதிதில்லை. ஆனால் ஒரு சிலர் வெளிப்படையாகக் காதலை ஒப்புக்கொள்வார்கள். ஒரு சிலர் வதந்திகளுக்கு கருத்து தெரிவிக்காமல் திருமணத்தின் போது தான் வாயைத் திறப்பார்கள். மேலும் சிலரோ இது போன்ற வதந்திகளுக்கு பதிலளித்து காலத்தை வீணாக்க விரும்ப மாட்டார்கள். ஆனாலும் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு ஜோடியின் பெயர் காதல் கிசுகிசுக்களில் சிக்கி விடும்.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் சமீபகாலமாக காதல் கிசுகிசுக்களில் சிக்கி வருகிறது ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி. தமிழில் மிருகம் படத்தில் நாயகனாக அறிமுகமான ஆதி, தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடுபுலி, அரவான், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் என வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது தெலுங்கில் பிசியான நடிகராக வலம்வரும் இவர், பாட்னர், கிளாப், குட் லக் ஷகி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவரும் நிக்கி கல்ராணியும் சேர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்தனர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஆதியின் பிறந்தநாளுக்கு நிக்கி கல்ராணி சென்றது, அடுத்தடுத்து இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது, பின் இருவரும் தனியாக சுற்றுலா செல்ல விமான நிலையம் சென்றது என இவர்களது பெயர் காதல் கிசுகிசுக்களில் சிக்கியது. ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட போதும், இருவரும் ஆம் என்றோ இல்லை என்றோ மறுக்காமல் மௌனம் காத்தது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்பெறச் செய்தது.
இந்நிலையில் மூன்றாவது முறையாக இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளனர். சுசீந்திரன் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகும் சிவுடு படத்தில் தான் ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க இருக்கிறார். நடிகர் ஜெய் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.




