நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
இயக்குனர் விஜய் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை தலைவி என்ற பெயரில் இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத், ஜெயலலிதாவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமூகவலைதளத்தில் விஜய்யை புகழ்ந்துள்ளார் கங்கனா.
அதில், ''அன்புள்ள விஜய், தலைவி படத்தின் முதல் பாதி டப்பிங் முடிந்தது. இரண்டாம் பாதி மட்டுமே மீதமுள்ளது. நமது இந்தப் பயணம் முடிவுக்கு வருகிறது. ஆனால், இதைப் பற்றி நினைக்கும்போது எனக்கு வருத்தமில்லை. உங்கள் இருப்பு இல்லை என நான் வருந்துவதே இந்த உணர்வு என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.
நான் உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீங்கள் தேநீர், காபி, அசைவ உணவு, பார்ட்டிகள் என எதையுமே ஏற்பதில்லை என்பதை நான் உங்களிடமும் முதலில் கவனித்தேன். உங்களை நெருங்குவது சாத்தியமற்றது. ஆனால், நீங்கள் என்றுமே விலகவில்லை என்பதை நான் மெதுவாகப் புரிந்துகொண்டேன்.
நீங்கள் மிகத் திறமையானவர் மட்டுமல்ல, ஒரு நடிகையாக நான் நன்றாக நடிக்கும்போது உங்கள் கண்கள் பிரகாசமாகும். பல ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் நான் உங்களிடம் ஒரு துளி கோபத்தையோ, அச்சத்தையோ, விரக்தியையோ பார்த்ததில்லை.
உங்களைப் பல வருடங்களாக அறிந்தவர்களிடம் உங்களைப் பற்றிப் பேசினேன். உங்களைப் பற்றிப் பேசும்போது அவர்கள் கண்களும் பிரகாசமடைகின்றன. நீங்கள் மனிதரே அல்ல, கடவுள். என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். நான் உங்கள் இல்லாமையை உணர்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு கங்கனா தெரிவித்துள்ளார்.