அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
கதாநாயகி, வில்லி, கேரக்டர் என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது பிரபலமாகி உள்ளார் அதோடு, பெண்களுக்கு உதவி செய்யும் சேவ்சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 5-ந்தேதி தனது 36ஆவது பிறந்த நாளை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் கொண்டாடினார் வரலட்சுமி. அதையடுத்து மீடியாக்களை சந்தித்தவர், சின்னஞ்சிறிய குழந்தைகளுடன் எனது பிறந்த நாளை கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார். பின்னர் மீடியாக்கள் அவரிடத்தில் கேள்வி கேட்டபோது, திருமணம் குறித்த ஒரு கேள்வியும் அவர் முன்பு வைக்கப்பட்டது. மற்ற கேள்விகளுக்கெல்லாம் சிரித்துக் கொண்டே பதிலளித்த வரலட்சுமி, அந்த கேள்வியை கேட்டதும் செம கோபமாகி விட்டார்.
''பெண்கள் என்றாலே கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஏதேனும் கட்டாயம் உள்ளதா? ஆண்களைப் போன்று எங்களைப் போன்ற பெண்களுக்கும் வாழ்க்கையில் கொள்கைகள் இருக்கக்கூடாதா? எப்போது சந்தித்தாலும் திருமணம் எப்போது? என்று கேட்கும் கேவலமான கேள்வியை இனிமேலும் என்னிடத்தில் கேட்காதீர்கள்'' என்று காட்டமாக பதிலளித்தார் வரலட்சுமி.